உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு

விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிப்பு

தர்மபுரி, : பாலக்கோடு பகுதியில் அதிகாரிகளின் வாகன சோதனையில், சாலை விதிகளை மீறிய, 8 வாக-னங்களுக்கு, 1.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, 2 சரக்கு லாரிகள் பறிமுதல் செய்யப்-பட்டது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்து ஏற்படுவதை தடுக்க, தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆலோசனை படி, ஆர்.டி.ஓ., தாமோதரன் தலைமையில், பிரேக் இன்ஸ்-பெக்டர் வெங்கிடுசாமி ஆகியோர் திம்மம்பட்டி நெடுஞ்சாலை முதல், காடுசெட்டிப்பட்டி வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மகேந்திரமங்கலம் அருகே, அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 3 பொக்லைன் வாக-னத்திற்கு தலா, 30,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, சட்டவிரோதமாக ஆட்-களை ஏற்றிச் சென்ற, 2 மினி சரக்கு லாரி, மற்றும் அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி அதி-வேகமாக சென்ற, 3 தனியார் பள்ளி பஸ்கள் என, 5 வாகனங்களுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.நேற்று நடந்த வாகன சோதனையில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு, 1.40 லட்சம் ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டு, 2 சரக்கு லாரிகள் பறி-முதல் செய்யப்பட்டு, மகேந்திரமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக, சாலை விதிமுறைகளை மீறி, சரக்கு ஆட்டோ, மினி லாரிகளில் பயணிகளை ஏற்றிச்-செல்வது, மொபைலில் பேசி கொண்டு வாகனங்-களை இயக்கினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, ஆர்.டி.ஓ., தாமோதரன் எச்ச-ரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை