உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆடி மாத சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு

ஆடி மாத சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு

தர்மபுரி, : ஆடி மாத சனிக்கிழமையையொட்டி, தர்மபுரியி-லுள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.தர்மபுரி அடுத்த முத்தம்பட்டியில், பழமையான வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, சனிக்-கிழமை, அமாவாசை மற்றும் பண்டிகை நாட்-களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வனப்பகுதியிலுள்ள இந்த கோவிலுக்கு, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்-மபுரி மற்றும் முத்தம்பட்டியை சேர்ந்த பக்தர்கள் ரயிலிலும், மினி பஸ்ஸில் வந்தும் வழிப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆடி மாத சனிக்கிழமை நாளான நேற்றும் அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். முன்னதாக, வீர ஆஞ்ச-நேய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்-களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பக்-தர்கள் தரிசனதுக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்-டது. இதேபோல், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மன்-றோகுளக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி.,ரோடு அபய ஆஞ்சநேயர் கோவில் உட்-பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், ஆடி மாத சனிக்கிழ-மையை முன்னிட்டு பல்வேறு அபிஷேக அலங்-காரங்கள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை