உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி மாவட்டத்தில் 175 மையங்களில் குரூப் - 4 தேர்வெழுதும் 62,630 பேர்

தர்மபுரி மாவட்டத்தில் 175 மையங்களில் குரூப் - 4 தேர்வெழுதும் 62,630 பேர்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இன்று நடக்கவுள்ள, 'குரூப் - 4' தேர்வில், 175 மையங்களில் மொத்தம், 62,630 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தமிழகத்தில், 'குரூப் - 4' தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஒரு சில மாதத்துக்கு முன் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, தர்மபுரி தேர்வு மையத்தில் தேர்வு எழுத, 20,797 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல் அரூரில், 12,674 பேர், பாப்பிரெட்டிப்பட்டியில், 7,981 பேர், நல்லம்பள்ளியில், 6,130 பேர், பென்னாகரத்தில், 5,592 பேர், பாலக் கோட்டில், 5,106, காரியமங்கலத்தில், 4,350 பேர் என மொத்தம், 62,630 பேர் எழுத உள்ளனர்.இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில், 'குரூப் - 4' தேர்வு எழுத தர்மபுரி தாலுகாவில், 59 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அரூர் தாலுகாவில், 34 தேர்வு மையங்கள், பாப்பிரெட்டிப்பட்டி, 26, நல்லம்பள்ளி, 19, பென்னாகரம், 15, பாலக்கோடு, 12, காரிமங்கலத்தில், 10 தேர்வு தேர்வு மையங்கள் என மொத்தம், 175 தேர்வு மையங்களில், 228 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த தேர்வுவை கண்காணிக்க, 9 பறக்கும் படையினர், 228 ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 175 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள, 228 தேர்வு அறைகளிலும் தேர்வு பணியில் அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தேர்வு மையங்கள் வழியாக சென்று வரும் பஸ்கள், தேர்வு மையங்கள் முன் நின்று செல்ல, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி