| ADDED : ஜூலை 28, 2024 03:13 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, பிரியாணி கடையில் வேலை செய்த ஊழியரை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தர்மபுரி அடுத்த வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முகமது ஆசிப், 25; டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார். இவர் தர்மபுரி, இலக்கி-யம்பட்டியில் உள்ள, தொப்பி வாப்பா பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். இருவர் முகமது ஆசிப்-பிடம் பேசியபடியே, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினர். இதில் தப்பி ஓடிய ஆசிப்பை மற்றவர்கள் சுற்றி வளைத்து, இரும்பு ராடுகள், கத்தியால் சராமாரியாக தாக்கினர். இதில், ஆசிப் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். பின்னர் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியது. தர்மபுரி டவுன் போலீசார் முகமது ஆசிப் உடலை மீட்டு விசாரித்தனர்.தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், கடையில் இருந்த 'சிசி-டிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசார-ணையை தொடங்கினர். டி.எஸ்.பி., சிவராமன் தலைமையில், நான்கு தனிப்படை அமைத்து சேலம், பெங்களூருவில் குற்றவா-ளிகளை தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம், காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.