உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குட்டையில் மூழ்கிய தொழிலாளி மாயம்

குட்டையில் மூழ்கிய தொழிலாளி மாயம்

ஓசூர்: ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கம்மாகுட்டப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் தருண், 19. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த நல்லுார் அருகே உள்ள தனியார் பண்ணையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம், 1:30 மணிக்கு, பண்ணையை ஒட்டிய குட்டையில் தன் உறவினர்களுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால், குட்டையில் மூழ்கினார். தகவலறிந்த, நல்லுார் போலீசார் மற்றும் ஓசூர் தீயணைப்புத்துறையினர் இணைந்து, தருணை தேடி வருகின்றனர்.

சாலை விபத்தில் வாலிபர் பலி

ஓசூர்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த போரநாயக்கனுாரை சேர்ந்தவர் தமிழன், 28; இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, ஓசூர் - ராயக்கோட்டை சாலையில், ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே, பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தமிழன், சம்பவ இடத்திலேயே பலியானார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ