| ADDED : ஜூன் 01, 2024 02:09 AM
அரூர்;அரூர் அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சம்பத்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:அரூர் டவுன் பஞ்., மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் ஈரோடு, திருப்பூர் பகுதிக்கு சென்று துணி வாங்கி வருகின்றனர். அதே போல் கோவை, ஈரோடு பகுதியில் உள்ள கல்லுாரிகளில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அரூர் பகுதியில் இருந்து அதிக நோயாளிகள் சென்று வருகின்றனர். போதிய அளவில் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அரூர் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரூர் கிளையிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு சென்று வர பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.