உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்

அரூர்: அரூர் அடுத்த நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை, பொய்-யப்பட்டி, கீழானுார், வாச்சாத்தி, கூக்கடப்பட்டி, மருதிப்பட்டி, சிங்கிரிப்பட்டி, மோட்டூர், காந்தி நகர், பள்ளிப்பட்டி, சுண்டகாப்-பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்-ளன. இங்குள்ள விவசாய நிலங்களில் மான், மயில், காட்டுப்-பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. மற்ற விலங்குகளை விட, காட்டுப்பன்றி-களின் தாக்குதலே அதிகளவில் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை மற்றும் மரவள்-ளிக்கிழங்கு செடிகளை அதிகளவில், நாசம் செய்வதால், விவசா-யிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த பயிர்க-ளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், காட்டுப்பன்றிகள் விளைநிலங்-களுக்குள் வருவதை, வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ