உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தி.மு.க., நிர்வாகி போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தி.மு.க., நிர்வாகி போக்சோவில் கைது

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 15 வயது மாணவி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 1ல் சேர உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு மாணவிக்கு தலைவலி அதிகமானதால், அரூர் அரசு மருத்துவமனைக்கு மாத்திரை வாங்க செல்வதாக, தாயிடம் கூறி சென்றார். அப்போது மாணவியின் தாய்க்கு பைனான்சில் கடன் கொடுத்துள்ள, கீழ்மொரப்பூரை சேர்ந்த முருகேசன், 59, என்பவர், இரவில் வெளியே வரக் கூடாது எனவும், மாணவியை அவரது அத்தை வீட்டில் விடுவதாகவும் கூறி அழைத்துள்ளார். மறுத்த மாணவியை கட்டாயப்படுத்தி முருகேசன் தன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். மாணவியின் அத்தை வீட்டிற்கு செல்லாமல், அருகிலுள்ள கரம்புகாட்டிற்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரிடமிருந்து தப்பிய மாணவி அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.மாணவி புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, முருகேசனை கைது செய்தனர். முருகேசன், தி.மு.க.,வில் தர்மபுரி மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை