உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

ஒகேனக்கல்:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் மைசூர், மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை, முழு கொள்ளளவை எட்டியதால், அணை பாதுகாப்பு கருதி,நேற்று கபினியில் வினாடிக்கு, 45,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையில், 5,500 கன அடி என, 2 அணைகளில் இருந்தும் காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு, 50,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 21,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை