உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி, 10 வகுப்பு முடித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். அவரது பெற்றோர் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்கின்றனர். இவர்களுடன் வேலை செய்த பொன்னேரி குட்டையை சேர்ந்த கோவிந்தராஜ், 40, என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.நேற்று முன்தினம் இது குறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் புகார் படி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கூலித்தொழிலாளி கோவிந்தராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை