உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு வருவாய்த்துறையினர் மீட்பு

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு வருவாய்த்துறையினர் மீட்பு

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்புவருவாய்த்துறையினர் மீட்புபாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பட்டாபி நகரில், அரசுக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இது குறித்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி நேற்று, பாலக்கோடு தாசில்தார் ராஜா தலைமையில், ஆக்கிரமிப்பில் இருந்த, 5 ஏக்கர் நிலம் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சிறு, சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அப்போது, மாரண்டஹள்ளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார், அவர்களை சமரசம் செய்தனர். மாரண்டஹள்ளி மண்டல துணை தாசில்தார் ஜெகதீசன், பஞ்சப்பள்ளி வி.ஏ.ஓ., சிரஞ்சீவி உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி