உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேங்கும் மழை நீர்

ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேங்கும் மழை நீர்

தர்மபுரி : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேங்கும் மழை நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாடி பஞ்.,க்கு உட்பட்ட கண்ணுகாரன்பட்டியில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் சிசிக்சை பெற்று வருகின்றனர்.தற்போது கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை தொடந்து பெய்து வருகிறது. இதனால், இந்த வளாகத்தின் முன் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.இதை அகற்றக்கோரி பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இவர்களின் நலன் கருதி, இந்த சுகாதார வளாகம் முன் தேங்கும் மழை நீரை, அதிகாரிகள் முறையாக அகற்றி, மழைநீர் கால்வாய் அமைக்க, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை