| ADDED : ஜூன் 14, 2024 01:26 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.தர்மபுரி மாவட்டத்தில், நெல், கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, காய்கறிகள், பூக்கள் மற்றும் பல்வேறு பழ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்ய, பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துகளை தெளிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கு அதிகமான பூச்சி கொல்லி மருந்துகளை தெளிப்பதால், விளைபொருள் தரும் பலன்களும் குறைந்து போக வாய்ப்புள்ளது. இந்நிலையில், தேவைக்கேற்ப பூச்சி மருந்துகளை பயன்படுத்தும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். இதில், பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை பற்றிய விழிப்புணர்வு மற்றும் எதிர்காலத்தில் மாசுபாடு இல்லாத தொழில்நுட்பங்கள் குறித்து, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா உள்பட பலர் பங்கேற்றனர்.