உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சித்தேரியில் காட்டு தீயால் ஏராளமான மரங்கள் நாசம்

சித்தேரியில் காட்டு தீயால் ஏராளமான மரங்கள் நாசம்

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலை காப்புக்காடுகளில், தேக்கு, வேம்பு, சந்தனம், சில்வர் ஓக், பலா, வேங்கை உள்ளிட்ட பல வகையான மரங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சித்தேரி மலையில் வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் மரங்கள் காய்ந்து பசுமை இழந்து வறண்டு காணப்படுகின்றன. நேற்று முன்தினம் சித்தேரி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றில் மள மளவென பரவிய தீயில், பல ஏக்கரில் மரம், செடி கொடிகள் எரிந்து நாசமாகின. வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை