உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொம்மிடி ஊராட்சி பகுதியில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

பொம்மிடி ஊராட்சி பகுதியில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சி பொ.துறிஞ்சிபட்டியில் அ.திமு.க., ஜெ.,பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.தர்மபுரி மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்-சரும், பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான --அன்ப-ழகன் தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., --கோவிந்தசாமி, அரூர் எம்.எல்.ஏ., சம்பத் குமார், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள் சேகர், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன் வரவேற்றார்.பிரசாரத்தில் தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் ,அ.தி.மு.க., அரசின் சாத-னைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறியும், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. ஒன்-றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர்கள் பெரி-யக்கண்ணு, தமிழ்மணி, நகர செயலாளர் தென்ன-ரசு, சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ