உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தர்மபுரி, இண்டூர் அருகே, அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி மாவட்டம், நத்தஅள்ளி கிராமத்தில் அங்களம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நவ., 17- அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்டவை நடந்தன. பின்னர், மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, யாக சாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அங்களம்மன் மற்றும் விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நத்தஅள்ளி, இண்டூர், பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை