| ADDED : மே 03, 2024 07:35 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி யூனியன், மோளையானுார் ஊராட்சியில் மோளையானுார், பூனையானுார், முள்ளிக்காடு, தேவராஜபாளையம் என, 4 கிராமங்கள் உள்ளன. இதில், 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இம்மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இருந்தும், குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இந்த ஊராட்சியில் வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை நீரை, ஊராட்சி நிர்வாகம் நம்பியுள்ளது. இதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கும், குடிநீர் வினியோகம் செய்து வந்தது. தற்போது அணை வறண்டுள்ள தால், குடிநீர் கிடைப்பது அரிதாக உள்ளது. ஒகேனக்கல் குடிநீரும் குறைவாக வருவதால், மக்கள் போதுமான குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். பூனையானுாரிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், 192 குடும் பங்கள் உள்ளன. இவர்களுக்கு உப்பு தண்ணீர் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வந்தது. ஆனால், தற்போது வாரத் திற்கு ஒரு முறை மட்டுமே தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது.ஒகேனக்கல், வாணியாறு குடிநீர் எட்டாக்கனியாக உள்ளது. இப்பகுதி மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவல நிலையில் உள்ளனர். வாணியாறு அணை பகுதியிலுள்ள கிணற்றை துார்வாரியோ அல்லது புதிய கிணறு வெட்டியோ அதிலிருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்களுக்கும், ஊராட்சியிலுள்ள அனைவ ருக்கும், சீராக குடிநீர் வழங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.