உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆஷா பணியாளர் சங்க மாவட்ட குழு கூட்டம்

ஆஷா பணியாளர் சங்க மாவட்ட குழு கூட்டம்

தர்மபுரி: ஏ.ஐ.டி.யூ.சி., ஆஷா பணியாளர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட குழு கூட்டம், மாவட்ட தலைவர் மேனகா தலைமையில், சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் தீபா, துணைத்தலைவர் உத்ரா முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட பொதுச்செயலாளர் மணி, துணைச்செயலாளர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.இதில், ஆஷா பணியாளர்களுக்கு பிரதி மாதம், 5-க்குள் ஊதியம் வழங்க வேண்டும். கிராம சுகாதார சேவகி பயிற்சி முடித்தவர்-களை, கிராம செவிலியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பணிபுரியும் இடத்திலேயே பணி வழங்க வேண்டும். 10, 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களை, நிரந்தர படுத்த வேண்டும். ஆஷா பணியாளர்களை இரவு நேர பணியில் அமர்த்துவதை கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்துவது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை