உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போக்குவரத்தின்றி வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்டு: பயணிகள் அவதி

போக்குவரத்தின்றி வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்டு: பயணிகள் அவதி

பாலக்கோடு: தமிழகம் முழுவதும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்கினர். இதனால், பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று சொற்ப அளவில் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பணிக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக வெகுநேரம் காத்திருந்தனர். மேலும், இயக்கப்பட்ட சில பஸ்களில் பயணிகள் முந்தியடித்து ஏறினர். * தர்மபுரி நகர போக்குவரத்து பணிமனை அருகே, அ.தி.மு.க., - கம்யூ., - பா.ம.க., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக வந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, தி.மு.க., தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர் ராஜா என்பவர், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.* அரூர், அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை முன், அண்ணா தொழிற்சங்க பேரவை, சி.ஐ.டி.யு., கூட்டமைப்பு கூட்டுக்குழு தொழிற்சங்கங்கள், ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி