உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் பீதி

விவசாய பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் பீதி

அரூர்: அரூர் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளால் விவசாயிகள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை தாம்பல் கிராமத்தில் தென்பெண்ணையாறு ஓடுகிறது. இக்கிராமங்களை ஒட்டி வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கரும்பு, கம்பு, மரவள்ளிக்கிழங்கு, சோளம் பயிரிடப்படுகின்றன. இவற்றை வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த வாரம் தாம்பல் கிராமத்தை சேர்ந்த பெரியவன் (50), ராஜமாணிக்கம் (43), செல்வராஜ் (37) ஆகியோரின் 5 ஏக்கர் கம்பு பயிரில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. கடந்தாண்டும் இதே போல் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. 'விவசாய பயிர்களை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்ற வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை