உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இருண்ட வானிலை: ஏமாற்றிய மழை

இருண்ட வானிலை: ஏமாற்றிய மழை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை அடிப்படையாக கொண்டு விவசாயி பணிகள் நடந்து வருகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் ஜூலை இறுதி வாரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் ஆடிப்பட்ட சாகுபடிக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார் செய்து வந்தனர். தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட மழை பெய்வது தாமதம் ஆன போதும், மாவட்டத்தில் பல பகுதியில் விவசாயிகள் ஏற்கனவே பெய்த மழையால் ஏற்பட்ட மண்ணின் ஈரத்தன்மையை வைத்து விவசாய சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தியதோடு, பல பகுதியில் ஆடிப்பட்ட விதைகள் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக வழக்கத்துக்கு மாறாக மழைக்கான அறிகுறியுடன் வானம் இருண்டு இருந்தது. காலை மற்றும் இரவு நேரங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தத போதும், பெரிய அளவில் மழையில்லை. நேற்று காலையில் இருந்து இருண்ட வானிலையுடன் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டது. ஆனால், மழையில்லை. வழக்கத்துக்கு மாறாக காற்று அதிகம் அடித்து வருகிறது. மாறுபட்ட வானிலை மாற்றம் காரணமாக இரவு நேரங்களில் குளிர் காற்று வீசத்துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை