உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இயந்திரம் மூலம் டீ விற்பனை துவக்கம்

இயந்திரம் மூலம் டீ விற்பனை துவக்கம்

தர்மபுரி: மாற்று திறனாளிகள் நலத்துறை, ஊட்டி புளுமான்ஸ் நிறுவனம் சார்பில் புதிய இயந்திர முறையில் தேநீர் பானங்கள் விற்பனை செய்யும் நிலையத்தை கலெக்டர் லில்லி துவக்கி வைத்து பேசியதாவது: தர்மபுரி மாவட்த்தில் நான்கு இடங்களில் இந்த விற்பனை மையம் துவங்கப்படுகிறது. தற்போது, கலெக்டர் அலுவலகத்திலும், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஒகேனக்கல், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் துவங்கப்படுகிறது. இந்த தேநீர் பான விற்பனை முழுக்க, முழுக்க மாற்று திறனாளிகள் கொண்டு இயக்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் மற்றவர்களுக்கு ஈடு இணையாக தொழில் செய்து வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சத்யபாலன், மாற்று திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ் அகமது, ஊட்டி புளுமான்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் அஜீத்குமார், உதவி திட்ட அலுவலர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி