மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
2 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
2 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
2 hour(s) ago
பாலக்கோடு : பருவமழை தவறினாலும், பருவம் போகாமல் புதிய தொழில்நுட்ப முறையில், விவசாயிகள் துவரை சாகுபடி செய்யலாம் என, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.இது குறித்து, பாலக்கோடு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அருள்மணி தெரிவித்ததாவது:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த, விவசாயிகள் துவரை சாகுபடி செய்ய, பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும். துவரை நாற்று நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ஒரு கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன், 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது, 4 கிராம் டைகோடெர்மா விரிடி இதில், ஏதாவது ஒன்றில் விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரத்துக்கு பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நாற்று நடுவதற்கு சில நாட்கள் முன், இளம் வெயிலில் வைத்து, கடினப்படுத்திய பின், நடவு செய்தல் நல்லது. எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருவமழை தவறினாலும், இந்த புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago