உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின் மயான கட்டடம் கட்டும் பணி ‍மெத்தனமாக நடப்பதாக குற்றச்சாட்டு

மின் மயான கட்டடம் கட்டும் பணி ‍மெத்தனமாக நடப்பதாக குற்றச்சாட்டு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்துார் பேரூராட்சியிலுள்ள, 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் கடத்துார் --பொம்மிடி ரோட்டில் மயானம் உள்ளது. ஆனால், போதுமான இடவசதியின்மையால், உடல்கள் அடக்கம் செய்த இடத்திலேயே, மற்ற உடல்களை அடக்கம் செய்யும் சூழல் உள்ளது. இதனால் மயானத்தில் சிலர் இறந்த உடல்களை எரித்தும் வந்தனர். இவ்வாறு எரியூட்டப்படும் போது குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அப்போது, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சிலர், மின் மயானம் தேடி, தர்மபுரி, அரூர் நகரங்களுக்கு செல்கின்றனர். இதை தவிர்க்க, கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்துார் மயானத்தில், 1.55 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் கட்ட பூஜை போடப்பட்டு, இப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, இப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி