உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அழகுமுத்துக்கோன் 267வது குருபூஜை

அழகுமுத்துக்கோன் 267வது குருபூஜை

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின், 267 வது குருபூஜை விழா, யாதவ இளைஞர் பண்பாட்டு சங்கம் சார்பில் நேற்று நடந்தது.யாதவ இளைஞர் பண்பாட்டு சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சங்க தலைவர் ஹூண்டாய் ரவி, தொழிலதிபர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர், அழகுமுத்துக்கோன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு, அன்னதானம் வழங்கினர்.இதில், யாதவ மகாசபை செயலாளர் மணிவண்ணன், நிர்வாக அமைப்பு செயலாளர் கவியரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை