உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில், இலக்கிய மன்ற விழா கல்லுாரி முதல்வர் அன்பரசி தலைமையில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் சித்திரைச்செல்வி முன்னிலை வகித்தார்.பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லுாரி, தமிழ் துறை தலைவர் பேகம் பேசுகையில், ''திருஞானசம்பந்தர் முதல் தற்கால இலக்கியவாதி வரை உள்ள தமிழ் இலக்கியங்கள் அகிலத்தை வெல்லும்,'' என்றார்.விழாவில், தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சுபா, சுஜிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்றாமாண்டு மாணவி மதியரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை