உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

இண்டூர் : குப்புசெட்டிப்பட்டி குருமன்ஸ் தெருவிலுள்ள, முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே குப்புசெட்டிப்பட்டி குருமன்ஸ் தெருவிலுள்ள, சங்கடஹர சதுர்த்தி விநாயகர், பாலமுருகன், இச்சா சக்தி, கிரியா சக்தி ஞான சக்தி கோவில், வளாகத்தில், முத்துமாரியம்மன் சன்னதி கட்டப்பட்டது. இதன், கும்பாபிஷேக விழா கடந்த, 20-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கணபதி பூஜை, லட்சுமி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகளுடன், மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை யாகசாலையில் இருந்து தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு சென்று, முத்துமாரியம்மன் கோவில், விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், குப்புசெட்டிப்பட்டி, இண்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை