| ADDED : மே 24, 2024 07:03 AM
தர்மபுரி : தகடூர் புத்தக பேரவை சார்பில், குழந்தைகளுக்கு காகித மடிப்பு கலை கோடைக்கால பயிற்சி முகாம், தர்மபுரியில் நேற்று நடந்தது. பேரவை செயலாளர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். இதில், குழந்தைகள் மொபைல்போனில் விளையாடுவதை தவிர்த்து, தங்களது கைகளால் விளையாடிய விளையாட்டுகளை தொடர வேண்டும். தற்போது மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு வந்தாலும், பாரம்பரிய விளையாட்டுக்களை மறக்கக்கூடாது. ஜப்பானிய மொழியில், ஓரி என்றால் மடிப்பு, காமி என்றால் காகிதம். காகிதங்களை பயன்படுத்தி உருவங்கள் செய்யும் கலை ஓரிகாமி. ஒரு சதுரமான அல்லது செவ்வகமான காகிதத்தை, கத்தரிக்கோல் கொண்டு வெட்டாமலும், பசை கொண்டு ஒட்டாமலும், கயிற்றால் கட்டாமலும் ஒரு வடிவமாக உருவாக்குவதே ஒரிகாமியின் தனிச்சிறப்பு. அதனால் தான் இதை காகித மடிப்புக்கலை என அழைக்கிறோம் என, காகித மடிப்புகலை பயிற்சியாளர் சேகர் விளக்கினார். பேரவை தலைவர் சிசுபாலன், நிர்வாகிகள் கார்த்திகேயன், அறிவுடைநம்பி, லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, 57 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.