உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுகாதாரமற்ற முறையில் குடிநீர் கேன் வைத்திருந்த கடைக்கு அபராதம்

சுகாதாரமற்ற முறையில் குடிநீர் கேன் வைத்திருந்த கடைக்கு அபராதம்

பாலக்கோடு : தர்மபுரி மாவட்ட, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா உத்தரவின்படி, பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் நேற்று பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த பழக்கடை ஒன்றில், மாம்பழம் விரைவாக பழுக்க செயற்கை முறையில் கார்பைட்கல் அல்லது பவுடர் உபயோகப்படுத்த படுகிறதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து, பாலக்கோடு எம்.ஜி. ரோடில் இருந்த சிப்ஸ் கடை, பழக்கடை, தேன், குளிர்பானம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் ஆய்வு செய்தார். அப்போது, சிப்ஸ் கடையில் பயன்படுத்தும் குடிநீர் கேன்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததையும், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் உரிய முறையில் இல்லாமல் இருந்ததாலும், அந்த கடை உரிமையாளருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், தக்காளி மார்க்கெட் பகுதியில் இருந்த தாபாவில் ஆய்வு மேற்கொண்ட போது, உரிய முறையில் சுகாதாரம் குறைவாகவும், மூலப் பொருட்கள் திறந்த நிலையிலும் இருந்தது கண்டு உடனடியாக தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள எச்சரித்தார். பின், அந்த தபாவிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய், 3 லிட்டர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ