| ADDED : ஜூலை 09, 2024 06:03 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விவசாய பயண்பாட்டுக்கு மண் அள்ளி கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர் நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண்ணை அள்ளி கொள்ள அறிவித்துள்ளார். அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணம் இல்லாமல் மண் எடுக்கலாம். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறையின் கட்டுபாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் என, 95 நீர்நிலைகள் உள்ளன. இவற்றில், கட்டணமின்றி மண் அள்ள இணைய தளத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், நேற்று முதல் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.dharmapuri.nic.inஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விபரங்களுக்கு, https://tnesevai.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் அறியலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.