உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேசிய வாக்காளர் தின போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தேசிய வாக்காளர் தின போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், 14வது தேசிய வாக்காளர் தின சிறப்பு கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.இதில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அவர் துவக்கி வைத்தார். மேலும், வாக்காளர்கள் அனைவரும், அனைத்து தேர்தல்களிலும் அவசியம் வாக்களிக்க கேட்டுக்‍கொண்டார். தொடர்ந்து, இந்த பிரசார வாகனம் சட்டசபை தேர்தல் அறிவிக்கும் வரை, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் வலம் வரும். அதில், ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்து, நேரடி விளக்கமளிப்பதற்கான வீடியோ காட்சி திரையிடப்படும். காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, இந்த வாகனம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் என தெரிவித்தார். பின், தேர்தல் விழிப்புணர்வு குறித்து, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தாசில்தார் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை