உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியில் கொட்டப்படும் குப்பை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஏரியில் கொட்டப்படும் குப்பை: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரிய ஏரி, 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வாணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், பெரிய ஏரி நிரம்புகிறது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதுடன், அரூர் நகர் பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், அரூர் நகரிலுள்ள இறைச்சிக்கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழிக் கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை போன்றவற்றை கொட்டும் இடமாக சிலர், ஏரிகளை பயன்படுத்துகின்றனர். மேலும், லாரி பட்டறைகளில் இருந்து கொண்டு வரப்படும் டயர் உள்ளிட்ட பழைய பொருட்கள் ஏரியில் போடப்படுகிறது. இதை தடுக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி