| ADDED : ஜூன் 22, 2024 12:32 AM
தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:முதல்வர் தலைமையில், கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் உடனான ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் தர்மபுரி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, கிராம அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவும், கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான, புகார்களை 63690 28922 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு பேசினார்.எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், டி.ஆர்.ஓ.,பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ.,க்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர், டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி உட்பட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.