உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பாரப்பட்டிக்கு இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை

பாப்பாரப்பட்டிக்கு இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க கோரிக்கை

தர்மபுரி: பாப்பாரப்பட்டிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களை, மீண்டும் இயக்க,- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பாப்பாரப்பட்டி பேரூராட்சி, 8- வது வார்டு கிளைக்கூட்டம் பாரதிதாசன் தெருவில் நேற்று நடந்தது. கிளைத் தலைவர் அம்மு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயா முன்னிலை வகித்தார். செயலாளர் மல்லிகா பேசினார். கூட்டத்தில், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய நகரங்களிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு இயக்கிய பல அரசு பஸ்கள், கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்டன. அதில், பெரும்பாலான அரசு பஸ்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. இதனால், அன்றாடம் பணிக்கு, கூலிவேலைக்கு சென்று வருவோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதிய பஸ் வசதி இன்றி சிரமப்படுகின்றனர். குறிப்பாக, மாலையில் தர்மபுரியிலிருந்து வரவேண்டிய டவுன் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதால், ஒரு மணி நேரத்துக்கும் மேல், பயணிகள் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படுகிறது. ஷேர் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் கொடுக்கும் நிலை உள்ளது. பெண்கள் அரசு வழங்கும் இலவச பயண சலுகையை பெற முடியவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர், நிறுத்தப்பட்ட அனைத்து டவுன் பஸ்களையும், பாப்பாரப்பட்டி வழியாக, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை செய்து தர வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை