உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தந்தையின் மது பழக்கத்தால் மனமுடைந்த மகன் தற்கொலை

தந்தையின் மது பழக்கத்தால் மனமுடைந்த மகன் தற்கொலை

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே எர்ரப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார், 45. இவரது மனைவி இன்பா, 37. இவர்களது மகன் ஹரீஷ், 15. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். சிவகுமார், அடிக்கடி மது போதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். தந்தையின் நடவடிக்கையால் மனமுடைந்த ஹரீஷ் இது குறித்து, அக்கம் பக்கத்தினரிடம் அவ்வப்போது தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு சிவக்குமார், மது போதையில் மனைவியிடம் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனமுடைந்த ஹரீஷ் நேற்று அதிகாலையில், வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய அதியமான்கோட்டை போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தந்தையின் மது பழக்கத்தால் விரக்தியடைந்து சிறுவன் ஹரீஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும், ஹரீஷ் நேற்று முன்தினம் இரவு, 'நான் இறந்து விட்டால், என்னுடைய இறுதி சடங்கில் அனைவரும் பங்கேற்பீர்களா...' என தன் நண்பர்களுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தந்தையின் மது பழக்கத்தால் சிறுவனின் உயிர் பறிபோனது எர்ரப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை