உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அரூர், அரூர் அடுத்த தென்கரைகோட்டையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கவிதா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில், தென்கரைகோட்டை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பஞ்.,களை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பம் அளித்தனர். இதில், அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். * பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய, 4 ஊராட்சிகளுக்கு மூக்காரெட்டிப்பட்டி தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் லலிதா தலைமையில் முகாம் நடந்தது. உதவி திட்ட அலுவலர் சந்தோசம், ஒன்றிய ஆணையாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., அபுல்கலாம் ஆசாத் வரவேற்றார். முகாமில், 1,015க்கும்மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.