மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
14 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
14 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
14 hour(s) ago
அரூர்: கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவை கடந்தாண்டு, நவ., 18ல் துவங்கியது. நடப்பு அரவைக்கு, 10,000 ஏக்கரில் பதிவு செய்த கரும்பு, 3.25 லட்சம் டன் அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டு கரும்பு வெட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில் கரும்புக்கான அரசின் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி படி, கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதாவது: ஏற்கனவே வேர்ப்புழு தாக்குதலால், கரும்புகள் பாதிக்கப்பட்டு தோட்டத்தில் காய்ந்து வருகின்றன. இதனால், கரும்புச்சாறு குறைந்து, எடை மற்றும் அதன் தரம் குறைவதுடன், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். இந்நிலையில், ஒரு டன்னுக்கு, 1,300 ரூபாயாக இருந்த வெட்டுக்கூலி, 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை தவிர, தொழிலாளர்கள் சென்று வர வாடகை வாகனமும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், ஆலை நிர்வாகம் டன் ஒன்றுக்கு, 3,349 ரூபாய் வழங்குகிறது. உழவு செய்தல், கரும்பு நடவு, களை எடுத்தல், தோகை எடுதல் உள்ளிட்ட பராமரிப்பு செலவு மற்றும் வெட்டுக்கூலி, மாமூல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. ஆனால், கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படவில்லை. இவற்றை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதனால், கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், அளித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தற்போதைய அரவை பருவத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago