உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டம் வெறிச்

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டம் வெறிச்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த, வார்டு சிறப்பு கூட்டம் அதிகாரிகள், பொதுமக்கள் யாருமின்றி வெறிச்சோடியது.கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளுக்கும், குறைகளை கேட்டறியும் விதமாக சிறப்பு வார்டுகள் கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரியில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.கிருஷ்ணகிரி, 1வது வார்டில் வார்டு சிறப்பு முகாமை நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் அலுவலர்கள் துவக்கி வைத்தனர். இரண்டு, மூன்று வார்டுகளுக்கு ஓரிடத்தில் பந்தல், நாற்காலிகள் போடப்பட்டும், பொதுமக்கள் யாரும் வரவில்லை. பல இடங்களில் முகாம்களில், அதிகாரிகளே இல்லை.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'முகாம் நடப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எங்களுக்கு, இது குறித்து எதுவுமே தெரியவில்லை' என்றனர்.பெங்களூரு சாலையில், 7, 8வது வார்டுக்கு குறைகேட்கும் முகாம் அமைக்கப்பட்டது. இதில், அதிகாரிகள். பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையில், குரங்குகள் அங்கு போட்டிருந்த நாற்காலிகளை தள்ளிவிட்டும், பேனர், பந்தல்களை கிழித்தும் விளையாடின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை