உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் வரும் 27ல் குத்தகை ஏலம்

தீர்த்தமலை சைக்கிள் ஸ்டாண்ட் வரும் 27ல் குத்தகை ஏலம்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீது, தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், 2,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். மலைக்கோவில் அடிவாரத்திலுள்ள, 2 மற்றும், 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான குத்தகை ஏலம் வரும், 27ல், காலை, 11:00 மணிக்கு, பொய்யப்பட்டியில் உள்ள தீர்த்தமலை பஞ்., அலுவலகத்தில் நடக்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சைக்கிள் ஸ்டாண்டில் கூரை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது: ஆண்டு தோறும் சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டர் விடப்படுகிறது. 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வந்த போதிலும், சைக்கிள் ஸ்டாண்டில் கூரை வசதி இல்லாததால், மழையில் வாகனங்கள் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகிறது. அதே போல், வாகனங்கள் திருட்டை தடுக்க, 'சிசிடிவி' கேமரா வசதி இல்லை. தரைத்தளம் முறையாக அமைக்கப்படாததுடன், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் இல்லை. எனவே, சைக்கிள் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை