உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செம்மேடு கிராமத்தில் முப்பெரும் விழா

செம்மேடு கிராமத்தில் முப்பெரும் விழா

ஏரியூர்: ஏரியூர் அருகே, செம்மேடு கிராமத்தில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை, ஏரியூர் தமிழ்ச்சங்கம் மற்றும் மஞ்-சார அள்ளி கிராம வளர்ச்சி இயக்கம் ஆகியவை இணைந்து, சிறப்பு யோகா, இயற்கையோடு இணைவோம், வாழ்வுக்கு வள்-ளுவம் என, முப்பெரும் விழாவை நடத்தின.நிகழ்விற்கு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா தலைமை வகித்-தனர். சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்-வாகி இயற்கை முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சின்னப்-பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசி-ரியர் பழனி, பட்டிமன்ற பேச்சாளர் இளந்தென்றல் சரவணன், பென்னாகரம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்-துவர் முனுசாமி பங்கேற்றனர். அவர்கள், இயற்கை மருத்துவம் சார்ந்தும், இயற்கை மருத்துவம் குறித்தும், கிராமப்புற மாணவர்க-ளுக்கு திருக்குறள் வாசிப்பின் அவசியத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் ஊர்மக்கள் மற்றும் மாணவர்களுக்கு திருக்-குறள் மற்றும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில், கோட்டாம்பள்ளம் தலைமையாசிரியர் ராஜா, மருத்துவர் அஞ்சு, ஏரியூர் தமிழ்ச்சங்க பொருளாளர் சந்தோஷ் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை