உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி அமைத்த சாக்கடையில் தனியார் வேலி

ஊராட்சி அமைத்த சாக்கடையில் தனியார் வேலி

பழநி: பழநி அருகே சிவகிரி பட்டி எம்.ஜி.ஆர் நகரில் ஊராட்சி நிர்வாகம் அமைத்த சாக்கடையில் தனியார் வேலி அமைத்துள்ளார்.பழநி அருகே சிவகிரி பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் திண்டுக்கல் ரோடு -பைபாஸ் ரோடு இணைப்பு சாலையில் சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாக்கடைக்கு அருகே உள்ள தனியார் நில உரிமையாளர் சாக்கடைக்குள் வேலி அமைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் முறையாக அப்பகுதியை நிலஅளவீடு செய்து தனியார் நிலமா, ஊராட்சி நிலமா என்பதை உறுதி செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை