உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 20 படுக்கைகளுடன் போதை மறுவாழ்வு மையம்

20 படுக்கைகளுடன் போதை மறுவாழ்வு மையம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதை பொருட்களின் பயன்பாடுகளில் சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களை மீட்பதற்காக 20 படுக்கை வசதிகளுடன் போதை மறுவாழ்வு மையம் அமைய உள்ளது.திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மது, போதை மாத்திரை,கஞ்சா உள்ளிட்ட போதைகளில் சிக்கி பாதிக்கப்படுவோர்களுக்காக மறுவாழ்வு மையம் திறக்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி 20 படுக்கைகளுடன் மையம் அமைய உள்ளது.மன நல மருத்துவ பிரிவு துறைத்தலைவர் உமாதேவி கூறுகையில்,'' போதையால் பாதிக்கப்படுபவர்கள் வசதியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் போதை மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ