உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சி.பி.எம்., மாவட்ட செயலர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், செயலர் ராமசாமி, பொருளாளர் தயாளன் பங்கேற்றனர். மாநில தலைவர் சண்முகம் பேசுகையில் ,'' தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி மதிப்பிலான வேளாண் பயிர்கள் வனவிலங்குகளால் சேதமாகிறது. ஆய்வு நடத்தி சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ