திண்டுக்கல் : ஜெ.சி.ஐ., இந்தியா மண்டலம் 29ன் சார்பில் ஜெ.சி.ஐ., திண்டுக்கல் வின்னர்ஸ் உபசரிப்பு மண்டல இடைமாநாடு திருச்சி ரோடு வேலு மஹாலில் மண்டல பட்டைய தலைவர் ஜெ.சி., சுந்தரேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாநாட்டின் தலைவரான ஜெ.சி., ஜி.வி.முத்துகுமார் முன்னிலை வகித்தார்.நாகா புட்ஸ் தலைவர் சவுந்தரகண்ணன், நடிகர் தாமு, ஜெ.சி.ஐ., திண்டுக்கல் வின்னர்ஸ் தலைவர் ஜெ.சி.,.சப்தகிரி, ஜெ.சி., எம்.எஸ்.மாணிக்கம் பேசினர். ஜெ.சி.ஐ., இந்தியாவின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மண்டல தலைவர்கள் சாதனையாளர்களை கவுரவித்து விருதுகள் வழங்கினர்.மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் மாவட்டத்தில் இருந்து 60க்கு மேற்பட்ட கிளை இயக்க தலைவர்கள், ஜெ.சி.ஐ., உறுப்பினர்கள், அணில் புட்ஸ் குழும தலைவர் ஜெ.சி.,கமலஹாசன், அரசன் ரியல் எஸ்டேட், மதுரை ராஜ்மஹால் சில்க்ஸ், நத்தம் என்.பி.ஆர்.கல்லுாரி , ஸ்ரீ சிவபாலஜி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏ.ஆர்.எஸ்., டி.எம்.டி,. ஜெயநாதன் சிட்பண்ட்ஸ், ஜெ.எஸ்.டபில்யூ., சிமென்ட் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.