உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்...

இருவர் மீது வழக்கு தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு பாரத் பெட்ரோல் பங்கில் அகரம் பிரிவு ஜோதிமாணிக்கம், கோட்டூர் ஆவாரம் பட்டி ராகுல் ராவிட் ஆகியோர் தங்களது டூவீலர்களுக்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தனர். அப்போது ஊழியர்களான முத்துப்பாண்டி ,கோவிந்தராஜை அசிங்கமாக பேசினர். தாடிக்கொம்பு எஸ்.ஐ., அழகர்சாமி, விசாரிக்கிறார்.கடன் கொடுத்தவருக்கு வெட்டுதாடிக்கொம்பு :திண்டுக்கல் குரும்பபட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி கண்ணன் 45. திண்டுக்கல் கலெக்ட்ரேட் சத்யா நகரில் வசிக்கும் கரனுக்கு வாகனத்தின் ஆர்.சி., புக்கை பெற்றுக் கொண்டு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். பணத்தைக் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. கண்ணன் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே டூவீலரில் சென்ற போது கரன் , 3 பேர் வழிமறித்து கத்தி ,அரிவாளால் வெட்டினர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கண்ணன் சேர்க்கப்பட்டார். தாடிக்கொம்பு எஸ்.எஸ்.ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார்.தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைதுஎரியோடு :எரியோட்டை சேர்ந்த தச்சு தொழிலாளி சக்திபாண்டி 27. திருமணமான பெண்ணுடன் பழகினார். இதை கண்டித்த சிறுமியின் தாய் மாமனுக்கும், சக்திபாண்டிக்கும் தகராறு ஏற்பட இருவரும் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று ஊர் திரும்பியபோது வரப்பட்டி பிரிவில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதை தண்ணீர்பந்தம்பட்டி கட்டட தொழிலாளி செந்தில்குமார் கண்டித்தார். ஆத்திரமடைந்த சக்திபாண்டி, உறவினர் சூர்யா 23, அவரது நண்பர்கள் குதுப்பணம்பட்டி சுதாகர் 21, குரும்பபட்டி விஜயகுமார் 20, ஒத்தக்கடை ஜீவா 19 ,ஆகியோர் செந்தில்குமாரை கற்களால் தாக்கினர். சூர்யா, ஜீவா, விஜயகுமார், சுதாகர் ஆகியோரை எரியோடு போலீசார் கைது செய்தனர்.மூதாட்டிகள் கால் முறிவுவேடசந்துார்: மல்வார்பட்டியைச் சேர்ந்தவர் சவரம்மாள் 75. நேற்று மதியம் ரோட்டில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டே வந்து அவர் மீது மோதியது. கீழே விழுந்ததில் வலது கால் எலும்பு முறிந்தது. வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். * நாகம்பட்டி வெங்கடாசலம் தனது அக்காள் குழந்தையம்மாளை 70, டூவீலரில் அழைத்து சென்றார்.நாகம்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. தூக்கி வீசப்பட்ட குழந்தையம்மாளின் வலது கால் எலும்பு முறிந்தது. வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.தகராறில் ஒருவர் கைதுதிண்டுக்கல்: பி.வி.தாஸ் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் உறவினர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்து கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் செல்வம் தகராறை விலக்கினார். அப்போது ஆறுமுகம்,செல்வம் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம் மதுபாட்டிலால் ஆறுமுகத்தை தாக்கினார். மேற்கு போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ