உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கள்ளர் பள்ளியில் கலை பாடப்பிரிவு நீக்கம்

கள்ளர் பள்ளியில் கலை பாடப்பிரிவு நீக்கம்

நிலக்கோட்டை: அணைப்பட்டி அரசு கள்ளர் பள்ளி 1923ல் தொடங்கப்பட்ட நுாற்றாண்டு கண்ட பள்ளியாகும். கணிதம், அறிவியல், கலை என மூன்று பிரிவுகளைக் கொண்டு 11, 12ம் வகுப்புகளில் மட்டும் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். மூன்றாண்டுகளாக 100 சதவீதம் வெற்றியைப் பெற்று வந்தனர். கம்ப்யூட்டர், வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களைக் கொண்ட கலை பிரிவில் 70-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இந்நிலையில் கலை பாட பிரிவை நீக்கிவிட்டனர்.இதன் காரணமாக அணைப்பட்டி சுற்றிய கிராம மாணவர்கள் கலை பாடப்பிரிவுக்காக நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, உசிலம்பட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.நீக்கிய பாட பிரிவை இந்தாண்டு கொண்டு வருவதோடு பள்ளி மாணவர்களின் சேரக்கையை அதிகப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை