உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

பழநி : பழநி அடிவாரம் கிரிவீதி ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக தி.மு.க.,அ.தி.மு.க., பா.ஜ., கம்யூ., வி.சி.க .,உள்ளிட்ட அனைத்து கட்சியினரும், தமிழ்நாடு வர்த்தகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். அடிவாரப் பகுதி பாதைகள் அடைக்கப்படுவதால் விடுதிகள், கடைகள், குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுவதால் சட்ட நடவடிக்கை, அறவழிப் போராட்டங்கள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. அனைத்து வர்த்தக சங்க பேரமைப்பு தலைவர் ஜேபி சரவணன், தி.மு.க., நகரச் செயலாளர் வேலுமணி, பா.ஜ., மாவட்டத் தலைவர் கனகராஜ், விஸ்வ ஹிந்து பரிஷத் செந்தில், கவுன்சிலர் விமலபாண்டியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை