உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு

ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்றிதழ் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு

திண்டுக்கல் : டூவீலர், கார் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் 40 வயதுக்கு மேலானோர் பெற வேண்டும் என்றால் அவர்களின் உடல் நிலை குறித்து மருத்துவ சான்றிதழ் சம்பந்தபட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இதில் அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதைத்தடுக்கும் வகையில் 40 வயதுக்கு மேலான ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்களை அணுகாமல் மருத்துவ சான்றிதழ் பெறும் அரசு டாக்டர்கள் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆன்லைனிலே ஆய்வு செய்து விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு விசாரணை செய்துகொள்வார்கள் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை