உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி அக்னி சட்டி

வாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி அக்னி சட்டி

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழாவில் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கம்பிளியம்பட்டி வர சித்தி வாராஹி அம்மன் கோயிலில் ஜூலை 5ல் கணபதி ஹோமம், பக்தர்கள் காப்புக் கட்டி 10 நாள் விரதத்தை தொடங்க ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது. தினமும் அன்னதானம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பத்து நாட்கள் நடடந்த இவ்விழாவில் மகா வாராஹி ஹோமம், லகு வாராஹி ஹோமம், அஸ்வாரூடா வாராஹி ஹோமம், சிமாருட வாராஹி ஹோமம், ஜூலை 10 பஞ்சமி திதி அன்று ஊஞ்சல் உற்ஸவம், விளக்கு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை