உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையால் நிரம்பி வழியும் ஆத்துார் நீர்த்தேக்கம்

மழையால் நிரம்பி வழியும் ஆத்துார் நீர்த்தேக்கம்

ஆத்துார் : மழையால் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் இந்தாண்டில் நேற்று 2வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது.மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளான மணலுார், மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தாண்டிக்குடி, புல்லாவெளி, ஆடலுார் பகுதிகளை நீர்பிடிப்பாக கொண்டு ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. இங்கிருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், 30க்கு மேற்பட்ட கிராம கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.நீர்த்தேக்கமானது 2022ல் ஜனவரி துவங்கி டிசம்பர் வரை 4 முறையும், 2023ல் 3 முறையும், இந்தாண்டு துவக்கத்திலும் நிரம்பியது. பின்னர் போதிய வரத்து நீரின்றி நிரம்புவதில் தாமதம் தொடர்ந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாதபோதும் அவ்வப்போது தொடர்ந்த சாரல் காணமாக வாய்க்காலில் குறைந்தபட்ச தண்ணீர் வரத்து இருந்தது.இதில் பெருமளவு தண்ணீர் பாசன குளங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதன் மூலம் கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டி கண்மாய் உட்பட பெரும்பாலான பாசன கண்மாய்கள் நிரம்பின. ஆனால் கூழையாறு, சில சிற்றோடைகளின் வரத்துநீரான சொற்ப தண்ணீர் நீர்த்தேக்கத்திற்கு வரத்தாக தொடர்ந்தது. இதை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தும், குறைந்தும் வந்த நீர்த்தேக்கம் (24 அடி) நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சமீப நாட்களாக தொடர்ந்த மழையால் வரத்து நீர் அதிகரித்து நேற்று நிரம்பியது. இதன் உபரி நீர் மறுகால் வாயிலாக வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி